Wednesday, July 28, 2010

தவப்பயன்




விழி மொழியிலே - அன்பே
வழி மொழிதலை
மயிலிறகினால் - உயிரை
வருடுமுணர்வை

அடி மனதிலே
இருக்கும் வலியை
அணுத்துகளையே
செதுக்கும் கலையை

காதலாய்
தவம் இருந்தேன்
காற்றிலென்
கவி கலந்தேன்

இருகரை கொண்டு ஒரு நதி ஓட
கரையில் நான் நின்று காதலில் வாட
ஒருதலைக் காதல் மறுகரை தேட
மறுத்தது கண்டு

உயிரிலே
துயரமும்
கலந்து கொண்டதோ. . .

நீ போகிறாய் என்று
தெரு வழியில் இதயத்தை விட்டால்
ஏன் வந்ததோ என்று
நடுத்தெருவிலே நசித்துச் சென்றாய்!

-தமிழ் வசந்தன்